உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதேநேரம், தமிழக அரசு, மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், அடுத்த கட்ட போராட்டம் குறித்து விவாதிக்கவும், தி.மு.க சார்பில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டது.
இக்கூட்டத்திற்கு திருநாவுக்கரசர், திருமாவளவன், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வருகை தந்துள்ளனர்.