நாளை முதல் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வரும் நிலையில் பொருட்களை விலையை குறைக்காமல் விற்றால் புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்புமுறை பயன்பாட்டில் உள்ள நிலையில் சமீபத்தில் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டது. அதன்படி பல பொருட்களின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. நாளை முதல் இந்த புதிய சீர்திருத்தம் அமலுக்கு வரும் நிலையில் புதிய ஜிஎஸ்டி கணக்கீட்டின்படியே பொருட்கள் விற்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பொருட்களின் விலையை குறைக்காமல் அதிக விலைக்கு விற்றால் அதுகுறித்து மக்கள் நேரடியாக புகார் அளிக்க நுகர்வோர் இணையதளமான www.consumerhelpline.gov.in மற்றும் உதவி எண் 1800 11 4000 ஆகியவற்றில் புகார் அளிக்கலாம். செல்போன் மூலமாக 14404 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியும் புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K