உலக ஐயப்பன் மாநாடு போஸ்டர்களில் ஐயப்பன் புகைப்படம் இல்லையா? பக்தர்கள் கண்டனம்

Siva

ஞாயிறு, 21 செப்டம்பர் 2025 (10:57 IST)
கேரளாவில் இடதுசாரி அரசு ஏற்பாடு செய்துள்ள 'உலக ஐயப்பன் மாநாடு'க்கான விளம்பர பலகைகளில் ஐயப்பன் படம் இடம்பெறாதது குறித்து பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
சட்டமன்ற தேர்தலுக்கு நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில், முதல்வர் பினராயி விஜயன் ஐயப்பன் சங்கமம் என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்துவதாக ராஜீவ் சந்திரசேகர் விமர்சித்துள்ளார். "அவர் உண்மையான பக்தராக மாறுவதை நான் வரவேற்கிறேன். ஆனால், பெரிய விளம்பர பலகைகளில்  ஐயப்பனின் உருவம் இல்லை. சபரிமலைக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது போல முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கல்வி அமைச்சர் சிவன்குட்டி ஆகியோரின் படங்கள் மட்டுமே உள்ளன. இது ஒரு ஜோக் போல இருக்கிறது" என்று ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.
 
மாநாட்டின் விளம்பரப் பலகைகளில் ஐயப்பன் படம் இல்லாததை கடுமையாக ஐயப்ப பக்தர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள உலக ஐயப்பன் மாநாட்டு விளம்பர பலகைகளில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தேவஸ்வம் அமைச்சர் வி.என். வாசவன் ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே உள்ளன. தேவஸ்வம் வாரிய தலைவர் மற்றும் ஐயப்பன் படம் இல்லை. ஐயப்பன் சங்கமத்திலேயே ஐயப்பன் இல்லை" என்று பக்தர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்