ரூ.700 கோடியை ஏற்க மறுத்தால் நீங்கள்தான் தர வேண்டும்; மத்திய அரசுக்கு கேரளா கோரிக்கை

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (13:55 IST)
கேரள வெள்ள நிவாரணத்துக்காக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த ரூ.700 கோடியை மத்திய அரசு ஏற்க மறுத்தால் நீங்கள் தாருங்கள் என்று கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

 
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்ததில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. இதற்கு 370 பேர் பலியாகினர். வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
 
கேரள மாநிலத்துக்கு பலரும் வெள்ள நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். மத்திய அரசு முதலில் ரூ.100 கோடி அறிவித்தது. பின்னர் பிரதமர் மோடி வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின் ரூ.500 கோடி அறிவித்தார்.
 
ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.700 கோடி அறிவிக்கப்பட்டது. இதனை மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளது. மேலும் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, கேரளாவின் வெள்ள நிவாரண பணிகளை நாங்களே மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளது.
 
மத்திய அரசின் இந்த முடிவுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக கேரள மாநில நிதியமைச்சர் கூறியுள்ளதாவது:-
 
மத்திய அரசிடம் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி கேட்டோம். ஆனல் ரூ.600 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இப்போது ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த நிவாரண நிதியை மத்திய அரசு ஏற்க மறுத்தால் அதனை மத்திய அரசு எங்களுக்கு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்