குஜராத் மாநிலத்தின் பரூக் மாவட்டத்தில் திருமணமான பெண் ஒருவருக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த கணவரின் வீட்டார் அந்த பெண்ணை கண்டித்தனர். ஆனாலும், அந்த பெண் தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டுள்ளார். அதன் பின், அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அவர் பழகி வந்த நபருடன் தலைமறைவாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கணவனின் குடும்பத்தினர், பெண்ணை அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்பட்ட நபரின் வீட்டுக்கு சென்று எச்சரிக்கை விடுத்தனர். இரண்டு நாள் கழித்தும் எந்த தகவலும் வராததால், ஆத்திரம் அடைந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் அந்த நபரின் வீட்டுக்கு சென்று புல்டோசர் வைத்து வீட்டை இடித்து சேதப்படுத்தினர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அவ்வப்போது சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது குஜராத்திலும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.