எதிர்த்து பேசியதால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்.. போலீசில் புகார்

Siva

செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (17:50 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒருவர் தனது மனைவியை மொட்டையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அவுராய் மாவட்டத்தில் உள்ள சியூர் என்ற கிராமத்தில், ஏப்ரல் 24ஆம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ராம் சாகர் என்ற நபர், அவரது மனைவி பபிதாவுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
 
வாக்குவாதத்தின் போது கணவன் முன்வைத்த பேச்சுகளை பபிதா எதிர்த்ததாகவும், இதனால் கடும் கோபமடைந்த ராம் சாகர், மனைவியை கொலை செய்ய மிரட்டியதோடு, தாக்கி, பின்னர் கூர்மையான கத்தியால் அவரது தலைமுடியை எடுத்து மொட்டையடித்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த சம்பவத்தின் பின்பு பபிதா தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மேலும் பபிதாவும் அவரது தாயாரும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தனர்.
 
தற்போது, ராம் சாகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்