என்ன குழந்தை என்பதை அறிய மனைவியின் வயிற்றை வெட்டிய கணவன்: உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran

சனி, 25 மே 2024 (10:46 IST)
தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை என்ன பாலினம் என்பதை அறிவதற்காக மனைவியின் வயிற்றை வெட்டிய கணவனால் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
 உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கணவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது மனைவியின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை அறிய முயற்சி செய்திருக்கிறார். ஏற்கனவே அவருக்கு ஐந்து பெண் குழந்தைகள் இருப்பதால் ஆண் குழந்தை தான் வேண்டும் என்று முடிவு செய்து அவர் ஆண் குழந்தை பிறக்காவிட்டால் மனைவி விவாகரத்து செய்து விடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் பூசாரி ஒருவரை நம்பி மனைவியின் வயிற்றைக் கிழித்து குழந்தையின் பாலினத்தை கண்டறிய போவதாக மிரட்டியதாகவும் அதிலிருந்து அவரது மனைவி தப்பிக்க முயற்சித்தபோது அறிவாளால் அவரது வயிற்றை வெட்டியதாகவும் கூறப்படுகிறது. 
 
அப்போது மனைவியின் சகோதரர் வந்ததை அடுத்து கணவர் தப்பி ஓடிவிட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்து பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அடுத்து கணவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்