ஒருவர் வீட்டில் எவ்வளவு பணம், தங்கம் வைத்திருக்கலாம்: மத்திய அரசு

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (15:33 IST)
வருமானவரித்துறை அதிகாரிகள் அவ்வப்போது திடீர் சோதனை செய்து கணக்கில் வராத தங்கம் மற்றும் பணத்தை கைப்பற்றி வருகின்றனர் என்ற செய்தியை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஒருவர் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது
 
திருமணமான பெண்கள் என்றால் வீட்டில் 500 கிராம் வரை தங்கம் எந்தவித ஆதாரமும் இன்றி வைத்திருக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. 500 கிராமுக்கு மேல் வைத்திருக்கும் தங்கத்திற்கு தகுந்த ஆவணங்கள் இல்லை என்றால் வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ய உரிமை உண்டு 
 
திருமணமாகாத பெண்கள் என்றால் 250 கிராம் வரை வைத்திருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  திருமணமாகாத அல்லது திருமணமான ஆண்கள் 100 கிராம் வரை தங்கத்தை வைத்திருக்க சட்டம் அனுமதிக்கிறது
 
ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு ரூபாய் பணம் வைத்திருப்பதற்கும் கணக்கு வைத்திருக்க வேண்டுமென்றும் கணக்கில் வைத்திருந்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வீட்டில் வைத்திருக்கலாம் என்ற கணக்கில் இல்லாமல் ஒரு ரூபாய் கூட வைத்திருக்க முடியாது என்றும் அரசு தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்