ஹரிகிருஷ்ணா ஓட்டியது டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சுனர் கார் ஆகும். இந்த காரில் 150 கி.மீ. வேகத்தில் ஹரிகிருஷ்ணா ஓட்டியுள்ளார். அப்போது, தண்ணீர் பாட்டிலை அவர் எடுக்க முயன்றுள்ளார். அப்போது முன்னால் ஒரு வளைவு இருக்கவே, அவர் காரை திருப்ப முயன்றுள்ளார். ஆனால், வேகமாக சென்றதால் அவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்துள்ளது.