5 ஆண்டுகளில் எவ்வளவு தேர்தல் பத்திரங்கள் விற்பனை? வெளியான தகவல்

Sinoj

புதன், 13 மார்ச் 2024 (14:28 IST)
5 ஆண்டுகளில் 22,217  தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை மார்ச் 15 க்குள்  தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில்  வெளியிட வேண்டும் ஏன்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. 
 
இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம்   SBI வங்கிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. 
 
இந்த நிலையில் தேர்தல் பத்திர விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா  நேற்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.
 
இந்த நிலையில்,  5 ஆண்டுகளில் 22,217  தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அதில்,, நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன.
 
அவற்றில், 22,030 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் SBI தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், ஒரு கோடி மதிப்பிலான 13,109 பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளது   எனவும் தெரியவந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்