இன்றும் நாளையும் கன மழை மற்றும் இடி மின்னலுடன் கூடிய சூறாவளிக்காற்று.. வானிலை எச்சரிக்கை..!

Mahendran

வியாழன், 18 செப்டம்பர் 2025 (17:10 IST)
சென்னையில் இன்று  ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 
 
மேலும், செப்டம்பர் 20 முதல் 24 வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்