தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது. மேலும் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்கவும் மறுத்துவிட்டது.