ரத்தம் ஏற்றிக்கொண்ட 14 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று! – அரசு மருத்துவமனை அலட்சியம் காரணமா?

புதன், 25 அக்டோபர் 2023 (11:31 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் உடல்நல குறைப்பாட்டால் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிக் கொண்ட 14 சிறுவர்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தலமீசியா என்னும் ரத்த மரபணு குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்த உற்பத்தி குறைவாக இருப்பதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்கள் ரத்தம் ஏற்றிக் கொள்வது வழக்கமாக உள்ளது. உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இவ்வாறாக தலமீசியா குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்த வங்கியிலிருந்து ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.

அவ்வாறு ரத்தம் ஏற்றப்பட்ட 6 முதல் 16 வயதிற்கு உட்பட்ட 14 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு கண்டறியபட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எச்.ஐ.வி மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஹெபடைடிஸ் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரத்த தானம் பெறும்போது கொடையாளியின் ரத்தத்தை முறையாக சோதனை செய்யாமல் பெற்றதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அந்த மருத்துவமனையில் இதுபோல சுமார் 180 பேர் ரத்தம் பெற்றுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்