தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ.221 கோடி டெபாசிட் ...போலீஸில் புகார்

வெள்ளி, 20 அக்டோபர் 2023 (20:00 IST)
சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்துபோன தனது பான் கார்டை வைத்து இந்த மோசடி நடந்திருப்பதாக ஒரு நபர்  போலீஸில் புகார் அளித்துள்ளார்.
.
சமீபத்தில் சென்னை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரது வங்கி கணக்கிற்கு திடீரென ரூ.9000 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
ரூ.9000 கோடி ஆட்டோ டிரைவர் வங்கி கணக்கிருக்கு தவறுதலாக பரிவர்த்தனை செய்த விவகாரத்தில் அதன் பின்னர் அவருடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வங்கி அதிகாரிகள் அந்த பணத்தை திரும்ப பெற்றனர். 
 
இதையடுத்து, தஞ்சாவூரைச் சேர்ந்த வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் வங்கி கணக்கில் ரூபாய் 756 கோடி இருப்பு இருப்பதாக எஸ்எம்எஸ் வந்ததை அடுத்து அந்த வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.  இ

இந்த சம்பவங்களை அடுத்து, மீண்டும் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
 
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ.221 கோடி டெபாசிட் ஆனதாகவும், அதற்கு ரூ.4.5 லட்சம் வரிப்பிடித்தம் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை  நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த 2019 ஆம் ஆண்டு தொலைந்துபோன தனது பான் கார்டை வைத்து இந்த மோசடி நடந்திருக்கலாம் என அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்