நிலவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் : அகில இந்திய இந்து மகாசபை

திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (10:12 IST)
இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என அகில இந்திய இந்து மகாசபை தலைவர் வலியுறுத்தி இருப்பது பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என்பதும் இந்தியாவின்  சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவில் விக்ரம் லேண்டரை தரையிறக்கியுள்ளது என்பதும் தெரிந்ததே
 
இதனால் நிலவின் பல ரகசியங்கள் வெளியே தெரியவரும் என்றும் பல மர்மமான விஷயங்களுக்கு விடை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்திராயன் 3 நிலவில் தரையறுகிய இடத்தை சிவசக்தி என்று பிரதமர் மோடி பெயரிட்ட நிலையில் தற்போது நிலவை  இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என  அகில இந்திய இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்கரபாணி தெரிவித்துள்ளார். 
 
இந்திய அரசுக்கு அவர் இதனை கோரிக்கையாக வைத்துள்ளதோடு உடனடியாக இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அரசு இது குறித்து பரிசீலனை செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்