நிலவில் பிளாட் போட்டு அதானி விற்பார், முஸ்லீம்களுக்கு அனுமதி இருக்காது: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.

திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (08:26 IST)
இந்தியாவின் சந்திராயன் 3 தற்போது வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ள நிலையில் அடுத்த கட்டமாக நிலவில் மனிதர்களை குடியேற்றும் வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. 
 
இந்த நிலையில் சந்திராயன் 3 வெற்றி குறித்து பல அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் -திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் நெகட்டிவ் ஆக சில கருத்துக்களை தெரிவித்து வருகிறது. 
 
-திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா இது குறித்து கூறிய போது நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பிரதமர் மோடி சிவசக்தி என்ற பெயர் சுட்டு உள்ளார். 
 
அடுத்த கட்டமாக அதானி ரியல் எஸ்டேட் நிலவில் தொடங்கவும் அவர் அனுமதி அளிப்பார். நிலவில் அதானி பிளாட் போட்டு விற்பனை செய்வார். அங்கு குடியிருப்புகள் உருவாக்கப்படும். ஆனால் அங்கு முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி இருக்காது.
 
 இந்து மற்றும் சைவ மக்களுக்கு மட்டுமே அனுமதி இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சைக்குரிய கருத்து தற்போது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்