உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட 5 வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல் கல்லாக ஒரேநாளில் 1.08 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மொத்தம் 64,05,28,644 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், தகுதி உடைய இளைஞர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோசாவது செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தகுதி உடைய இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை ஹிமாச்சல பிரதேசம் பெறுகிறது.