இந்தியாவில் ஒரே நாளில் 1.08 கோடி பேருக்கு தடுப்பூசி

புதன், 1 செப்டம்பர் 2021 (08:30 IST)
இந்தியாவில் ஒரே நாளில் 1.08 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட 5 வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
 
இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல் கல்லாக ஒரேநாளில் 1.08 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 3,70,640 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் 64,05,28,644 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்