மின் கட்டணம் செலுத்தாததால் இருளில் மூழ்கிய ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

Siva

வியாழன், 23 மே 2024 (12:19 IST)
பாம்பன் பாலத்தில் போடப்பட்டுள்ள விளக்குகளுக்கு மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதால் மின்வாரியத்துறை மின்சாரத்தை துண்டித்து விட்டதாகவும் இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் அழகிய வண்ணங்களில் மின் விளக்குகள் எரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தேசிய நெடுஞ்சாலை துறைக்கு போதுமான வருமானம் இல்லாததால் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ரூபாய் நாற்பது லட்சம் வரை மீன் வாரியத்திற்கு தேசிய நெடுஞ்சாலை துறை மின் கட்டணம் செலுத்தவில்லை என்றும் மின் கட்டணத்தை உடனே செலுத்துமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்திய போதிலும் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்று தெரிகிறது.

இதனை அடுத்து பாம்பன் பாலத்தில் தற்போது மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்றும் அதனால் பாம்பன் பாலம் இருளில் மூழ்கியுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாம்பன் பாலத்தில் அனைத்து மின் விளக்குகளும் எரிவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்