பிரதமர் மோடிக்கு வெள்ளி கிரீடம்! – அனுமன் கோவிலில் பரிசளிப்பு!

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (10:53 IST)
அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக செல்லும் பிரதமருக்கு சிறப்பு பரிசு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நீண்ட ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்து வந்த அயோத்தி விவகராம் முற்று பெற்று ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கா பணிகள் கோலகலமாய் தொடங்கியுள்ளன. இன்று நடைபெறும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இன்று காலை டெல்லியில் புறப்படும் பிரதமர் மோடி 11.40 மணியளவில் அயோத்தியில் உள்ள பழமையான அனுமன் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். அனுமன்கரி கோவிலில் பிரதமர் மோடிக்கு வெள்ளி கிரீடம் பரிசளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிறகு ராமர் கோவிலுக்கு செல்லும் அவர் அங்குள்ள குழந்தை ராமரை தரிசிக்க உள்ளார்.

இன்று ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா என்பதால் அயோத்தி கோலகலமாக காட்சியளிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்