ஜனவரி 26ல் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி: நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்!

புதன், 25 ஜனவரி 2023 (19:18 IST)
ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதை அடுத்து அதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 
 
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு டெல்லியில் அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் இதில் அமைச்சர் மற்றும் பட்ஜெட் தயாரித்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிந்ததே. 
 
அந்த வகையில் இந்த ஆண்டு அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்