நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு

வெள்ளி, 13 ஜனவரி 2023 (14:22 IST)
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதும் அதில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி முதல் ஏப்ரல் ஆறாம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். 
 
இந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் 67 நாட்கள் நடைபெறும் என்றும் முதல் கூட்டத்தொடரில் புதிய குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுள்ள திரௌபதி முர்மு இரு அவைகளிலும் உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்வார் என்றும் அதன் பிறகு மார்க் முதல் ஏப்ரல் வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்