தீவிரமடையும் கொரோனா; குஜராத்தில் ஊரடங்கு! – உஷாராகும் மாநிலங்கள்!

செவ்வாய், 16 மார்ச் 2021 (15:51 IST)
இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த தொடங்கியுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களில் கொரோனா மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. முக்கியமாக கேரளா, குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களான அகமதாபாத், வதோதரா, சூரஜ் மற்றும் ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் மார்ச் 31 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல மகாராஷ்டிராவிலும் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாவிட்டால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டி வரலாம் என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்