ஏப்ரல் தொடக்கத்தில் மூடப்படுமா பள்ளிகள்!?? – பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்!

செவ்வாய், 16 மார்ச் 2021 (10:32 IST)
தமிழகத்தில் பல்வேறு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் மூடப்படுவதாக வெளியான தகவல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வீரியம் கொண்டுள்ள நிலையில் பள்ளி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாப்பேட்டை பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பட்டுக்கோட்டை, மன்னார்குடியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா காரணமாகவும், தேர்தல் காரணமாகவும் மார்ச் இறுதியில் பள்ளிகள் மூடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது வைரலாகியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் சமூக வலைதளங்களில் வெளியான செய்தி போலி என்றும், ஏப்ரல் 1க்கு பிறகும் பள்ளிகள் வழக்கம்போல தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்