துடிப்பான குஜராத் என்ற தலைப்பிலான 10-வது வர்த்தக மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் காந்தி நகரில் நடைபெறுகிறது. இதில், 100 நாடுகள் பங்கேற்பதுடன் 33 நாடுகள் பங்குதாரர்களாக இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் 34 கூட்டணி நாடுகளும், 16 அமைப்புகளும் பங்கேற்கின்றன.
முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சையத் அல் நயான், செக் குடியசு நாட்டின் பிரதமர், திமோர் லெஸ்டே அதிபர், மொசாம்பிக் அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த மாநாட்டில், முக்கிய தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, டாடா நிறுவனத் தலைவர், மைக்ரோசாப்ட் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.