டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்றுள்ளார். அவருக்கு, அம்மாநில மக்கள் வித்தியாசமான முறையில் வரவேற்பு அளித்துள்ளனர்.
பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து உரி தாக்குதளுக்கு பழிதீர்க்கும் விதமாக சமீபத்தில் இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் மூன்று தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இதை பாகிஸ்தான் அரசு மறுத்தது.
இதுகுறித்து பேசிய டில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்திய அரசு இதற்கான வீடியோ ஆதாரங்களை வெளியிட வேண்டும் என அவர் விமர்சித்தார். இதனால் அவர் பாகிஸ்தானில் ஹீரோவானார்.
இதையடுத்து கெஜ்ரிவால் மீது இந்திய மக்கள் கடும் காட்டமாகினர். அதை வெளிப்படுத்தும் வகையில், இவரது போட்டோவை ஒசாமா பின்லேடன், ஹபீஸ் சையது உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு மத்தியில் வைத்து பிளக்ஸ் அடித்துள்ளனர். மேலும் அதில் ‘பாகிஸ்தானின் ஹீரோக்கள்’ எனவும் எழுதப்பட்டுள்ளது.
இதற்கு குஜராத்தை ஆளும் பாஜக அரசு தான் காரணம் என ஆம் ஆத்மி சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இதை மறுத்துள்ள பாஜக இது இந்தியாவை நேசிக்கும் சாதரண குடிமகனுடைய கோவத்தின் வெளிப்பாடுதான் என தெரிவித்துள்ளது.