குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மருத்துவமனையில் இந்து, முஸ்லிம் என தனித்தனி கொரோனா வார்டுகள் இருப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பொதுவாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் ஆண்கள், பெண்கள் என பிரித்து மட்டுமே வார்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இந்து முஸ்லீம் என மதவாரியாக கொரோனா வார்டுகள் பிரிக்கப்பட்டிருப்பதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது
இதுகுறித்து அந்த மருத்துவமனையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘அரசு அறிவுறுத்தல் காரணமாகவே இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்திக்கு குஜராத் மாநிலத்தின் சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அரசிடம் இருந்து இப்படி ஒரு அறிவுறுத்தல் கூறப்படவில்லை என்றும் மத ரீதியாக நோயாளிகளை பிரிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளது
அப்படியானால் இந்த செய்தி பொய்யா? அல்லது குஜராத் அரசு உண்மையை மறைக்கின்றதா? என்பது புரியாமல் குஜராத் மாநில மக்கள் குழப்பத்தில் உள்ளனர்