பெட்ரோலிய பொருட்கள் மீது வரி குறைக்கப்படுமா? துவங்கியது GST கவுன்சில்

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (13:01 IST)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேரடியாக இன்று 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் துவங்கியுள்ளது. 

 
கொரோனா பரவல் காரணமாக காணொளி வாயிலாக கடந்த ஆண்டு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்ட வந்த நிலையில், ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு நேரடியாக இன்று கூட்டம் நடைபெறுகிறது. உத்திரபிரதேசம் லக்னோவில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. 
 
ஆம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் துவங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் அத்யாவசிய பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது,   பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்