பேரன் இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட பாட்டி

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (15:48 IST)
மேற்கு வங்கத்தில் பேரன் இறந்த துக்கத்தில், பாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
மேற்கு வங்க மாநிலம் பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் சர்தார் (17) என்ற மாணவன் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மாணவன் தனது நண்பனுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். போனில் சார்ஜ் கம்மியானதால், சார்ஜ் போட்டபடி பேசினார். எதிர்பாராதவிதமாக செல்போன் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் பாஸ்கர் உயிரிழந்தார்.
இந்நிலையில் பாஸ்கரின் பாட்டி, பேரன் இறந்த துக்கத்தில் இருந்துள்ளார். வீட்டில் அனைவரும் தூங்கிய பின், பாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார்,பாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
பேரன் இறந்த துக்கத்தில், பாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்