சூப்பர் மார்க்கெட்டில் பெட்ரோல் விற்பனை: மத்திய அரசின் புதிய திட்டம்!

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (08:00 IST)
இன்று வரை பெட்ரோல், டீசல் வாங்க வேண்டும் என்றால் பெட்ரோல் பங்க் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதுவும் வாகனத்துடன் போனால்தான் பெட்ரோல், டீசல் கிடைக்கும். ஆனால் விரைவில் பெட்ரோல், மற்றும் டீசல் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
 
இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிபொருள் துறை அமைச்சகம் புதிய திட்டம் ஒன்றை வகுத்து அந்த திட்டத்தை அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்துவிட்டால் இனிமேல் பொதுமக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் பெட்ரோலை வாங்கி கொள்ளலாம். இதற்காகவே பெட்ரோல் விற்பனைக்கான கட்டுபாடுகளை தளர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது
 
சூப்பர் மார்க்கெட்டில் பெட்ரோல் விற்பனை செய்யும் அனுமதியை பெற பியூச்சர் குரூப், ரிலையன்ஸ், சவுதி அராம்கோ ஆகிய நிறுவனங்கள் முயற்சி வருவதாக கூறப்படுகிறது. சூப்பர் மார்க்கெட்டில் பெட்ரோல் விற்பனை தொடங்கிவிட்டால் வாகனம் வைத்திருப்பவரகளுக்கு வசதியாக இருக்கும் என கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்