உள்நாட்டு விமான கட்டணங்கள் உயர்கிறதா? இண்டிகோ சி.இ.ஓ பேட்டி

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (10:57 IST)
உள்நாட்டு விமானக் கட்டணங்கள் உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
விமான நிறுவனங்கள் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் விமான எரிபொருள், ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு, பராமரிப்பு உள்பட செலவுகள் அதிகமாகி உள்ளதாகவும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 
 
இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவன சிஇஓ பேட்டி அளித்தபோது உள்நாட்டு விமானங்களில் கட்டண உச்ச வரம்பை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்தே உள்நாட்டு விமானக் கட்டணங்களை உயர்த்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்