வங்கிகளில் அரசு ஊழியர்கள் ரூ.10 ஆயிரம் பெற்று கொள்ளலாம்

புதன், 30 நவம்பர் 2016 (11:16 IST)
வங்கிகளில் அரசு ஊழியர்கள் அவர்களது சம்பளத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் ரொக்கமாக பெற்று கொள்ள தெலுங்கானா அரசு ஏற்பாடு செய்துள்ளது. 


 


 
ரூபாய் நோட்டு தாட்டுபாடு காரணமாக வங்கிகளிலும் பணம் எடுக்க முடியாத சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. ஏடிஎம்களும் செயல்படாமல் உள்ளன. இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
 
மாத சம்பள தேதியும் நெருங்கிவிட்டது. இன்னும் ஏடிஎம்கள் வழக்கம் போல் செயல்படவில்லை. தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம் வழங்கப்படுகிறது. வங்களில் செலுத்தப்படும் பணத்தை முழுவதுமாக எடுக்க முடியாத சூழல் உள்ளது.
 
இந்நிலையில் தெலுங்கானா அரசு சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்து இருக்கிறது. அரசு ஊழியர்கள் அவர்களின் சம்பளத்தில் ரூ.10 ஆயிரம் ரொக்கமாக வங்கிகளில் உடபே பெற்று கொள்ள வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
அதன்படி அரசு ஊழியர்களுக்கு அவர்கள் வாங்கும் சம்பளத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு ‘செக்’ தரப்படும். அந்த செக்கை வங்கியில் கொடுத்த உடன் ரூ.10 ஆயிரம் ரொக்கமாக தரப்படும். இதற்காக வங்கிகளில் தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்