ஜஸ்ட் டயல்' நிறுவனத்தை வாங்குகிறதா கூகுள்?

சனி, 11 நவம்பர் 2017 (10:42 IST)
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான 'ஜஸ்ட் டயல்' நிறுவனத்தை கூகுள் நிறுவனம் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.  2 கோடி நிறுவனங்களின் தகவல் திரட்டுக்களை கொண்டுள்ள ஜஸ்ட் டயல் நிறுவனத்தை கூகுள் கைப்பற்றினால் கூகுள் நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளும் மிகப் பெரிய கையகப்படுத்தலாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.



 
 
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே ஜஸ்ட் டயல் நிறுவனத்தை வாங்குவது குறித்து கூகுள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இரு நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தை குறித்த தகவல் கசிந்தவுடன் ஜஸ்ட் டயல்' நிறுவனத்தின் பங்குகள் 20% வரை பங்குச்சந்தையில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே கூகுள் நிறுவனம்  2014-ம் ஆண்டில் இணையதள பாதுகாப்பு சார்ந்த இம்பீரியம் நிறுவனத்தையும், கடந்த 2016ஆம் ஆண்டு பெங்களுருவைச் சேர்ந்த ஹல்லி லேப் என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தையும் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்