ஆக்ஸிஜன் அழுத்த பிரச்சினை; கோவாவில் மீண்டும் நோயாளிகள் பலி!

வெள்ளி, 14 மே 2021 (08:52 IST)
கோவா அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் விநியோக கோலாறு காரணமாக 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, படுக்கை பற்றாக்குறை போன்றவையும் எழுந்துள்ளது.

இந்நிலையில் கோவா அரசு மருத்துவமனையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென ஆக்ஸிஜன் அழுத்தம் குறைந்ததால் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிரமம் எழுந்துள்ளது. இதனால் சில மணி நேரங்களில் 15 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த சில நாட்கள் முன்னதாக ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்