உரிய நேரத்தில் கிடைக்காத ஆக்ஸிஜன்; பறிபோன 26 கொரோனா நோயாளிகள்! – கோவாவில் அதிர்ச்சி!

புதன், 12 மே 2021 (08:11 IST)
கோவா அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதால் 26 கொரோனா நோயாளிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வரும் நிலையில் கோவாவிலும் அப்படியான துயர சம்பவம் நடந்துள்ளது.

கோவாவில் பனாஜி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு எழுந்ததால் நேற்று ஒருநாள் இரவிற்குள் 26 கொரோனா நோயாளிகள் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள மாநில சுகாதார மந்திரி விஷ்வஜித் ரானே ”மருத்துவமனையில் ஆக்ஸிஜன் விநியோக பற்றாக்குறையால் நோயாளிகள் இறந்தது உண்மைதான். 1200 ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு தேவை இருந்த நிலையில் 400 சிலிண்டர்கள் மட்டுமே சப்ளை செய்யப்பட்டன. கொரோனா சிகிச்சை மேற்பார்வை குழு இதுகுறித்து தனது கருத்துகளை முதலமைச்சருக்கு வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்