உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது மாணவி ஒருவர், நீதி வேண்டும் இல்லை கருணைக் கொலைக்கு அனுமதி வேண்டும் என்று ஐ.ஜி.யிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் - குடியா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. ஓம்பிரகாஷ் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக காவல்துறையினரிடம் பொய்யான புகார் அளிக்கப்பட்டது. அதன்படி ஓம்பிரகாஷ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு விடுதலை ஆனார்.
அவரது மூத்த மகள் அனுஷ்கா(12) இதுகுறித்து வாரணாசி ஐ.ஜி.யிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது தந்தை மீது தாய் மாமன் காவல்துறையில் பொய்யான புகார் கொடுத்து, எங்கள் தாயாரை அழைத்து சென்றுவிட்டார். நானும் என் உடன் பிறந்தவர்களும் தாத்தா வீட்டில் வசிக்கிறோம். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பல முறை புகார் கொடுத்தும். அதை யாரும் கண்டு கொள்ளாமல் நிராகரித்து விட்டனர்.
எங்களுக்கு நீதி வழங்க வேண்டும், இல்லை என்றால் இறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.