ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பரிசாக ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதற்கிடையில் அந்த பெண்ணின் பெற்றோர் உயிரிழந்துள்ளனர். அதனால் மன அழுத்தத்துக்கு ஆளான அந்த பெண் மிகவும் சோகமாக காணப்பட்டுள்ளார்.
அந்த பெண்ணின் நிலையைப் பார்த்த குடும்பத்தினர் அவரை ஒரு மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர். அந்த மந்திரவாதியோ பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாகவும், அதை விரட்டுவதாக சொல்லி அவரை கடுமையாக தாக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரைக் கீழே தள்ளி அவர் மேல் ஏறி உட்கார்ந்து அடித்துள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.