பேய் பயம் ; விருந்தினர் மாளிகையாக மாறிய முதல்வர் பங்களா

சனி, 15 ஏப்ரல் 2017 (16:52 IST)
முதல்வர் தங்குவதற்காக கட்டப்பட்ட மாளிகையில் பேய்கள் நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவலையடுத்து, அருணாச்சல பிரதேசத்தில் கட்டப்பட்ட அரசு பங்களா தற்போது விருந்தினர் மாளிகையாக மாற்றப்பட்டுள்ளது.


 

 
அருணாச்சல பிரதேசத்தில் 2009ம் ஆண்டு டோர்ஜிகாண்டு என்பவர் முதல்வராக இருந்த போது, ரூ.60 கோடி செலவில் அந்த மாநில முதல்வர்கள் தங்குவதற்காக ஒரு பங்களா கட்டப்பட்டது. அதில் அவரே முதன் முதலாக வசித்தார். அவர் கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விமான விபத்தில் பலியானார். அவருக்கு அடுத்த படியாக அந்த பங்களாவில் தங்கிய முதல்வர் ஜார்போம் காம்லின் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
 
அதேபோல், அந்த மாநிலத்தில் பொறுப்பு முதல்வராக இருந்த கலிகோ புல் என்பவரும் கடந்த 2006ம் ஆண்டும் துக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், அங்கு பணிபுரிந்த அரசு ஊழியர் ஒருவரும் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்படி அந்த பங்களாவில் வசித்தவர்கள் தொடர்ந்து மரணம் அடைந்ததால், அங்கு பேய் நடமாட்டம் இருப்பதாக கருத்து நிலவி வந்தது. 
 
எனவே, அதற்கு பின்னர் வந்த முதல்வர் அங்கு தங்க மறுத்தனர். எனவே, தற்போது அந்த பங்களா விருந்தினர் மாளிகையாக மாற்றப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்