விண்ணில் பாயும் ஜிசாட் -11 – அதிவேக இணையதள சேவை

செவ்வாய், 4 டிசம்பர் 2018 (08:26 IST)
அதிவேக இணையதள சேவையை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஜிசாட் 11 செயற்கைக்கொள் நாளை விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

இந்தியா இ[ப்போது தொலைதொடர்புத் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதை முன்னிட்டு அதிவேக இணையதள சேவையை அனைத்து பகுதிகளுக்கும் வழங்க புதிய செயற்கைக் கோளை உருவாக்கியுள்ளது. ஏற்கனவெ ஜிசாட் 29 எனும் செயற்கைக்கோள் தொலைத்தொடர்புத்துறை சம்மந்தமான செயற்கைக் கோள்தான். தொலைத்தொடர்பு துறை சம்மந்தமான செயற்கைக் கோள்களிலேயே ஜிசாட் 29 அதிக எடைக் கொண்டதாகும்.

இந்த ஜிசாட் 11 செயற்கைக் கோளை உருவாக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் பல மாதக் காலமாக தங்கள் உழைப்பை செலுத்தி உள்ளனர். இந்தாண்டு மார்ச் மாதமே இந்த செயறகைக் கோள் விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால் அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதானது. தற்போது அனைத்துப் பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு விண்ணில் ஏவத் தயாராக உள்ளது.

இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதற்காக தென் அமெரிக்காவில் உள்ள பிரஞ்ச் கயானாப் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 2.07 -3.03  இடைப்பட்ட நேரத்தில் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இதற்காக இஸ்ரோ தலைவர் கே.சிவன் மற்றும் பொறியாளர்கள் தென்அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானா விண்வெளி மையத்தில் முகாமிட்டுள்ளனர் .

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்