நிலவின் பின்பக்கம் மூலம் மின்சாரம்; களமிறங்கிய இஸ்ரோ

புதன், 27 ஜூன் 2018 (15:30 IST)
நிலவின் பின்பக்கத்தில் உள்ள பொருட்களை ஆராய்ச்சி செய்து அதன்மூலம் மின்சாரம் தயாரிக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

 
சீனா நிலவின் பின்பக்கத்தை ஆராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் நிலவின் பின்பக்கத்தை ஆராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக 2020ஆம் ஆண்டில் ரோவர் ஒன்றை அனுப்ப உள்ளது. 
 
நிலவின் பின் பக்கத்தில் பூமியில் அரிதாக கிடைக்கும் ஹீலியம் 3 அதிகமாக உள்ளதாம். இதன்மூலம் மாசு இல்லாத அணு மின்சாரத்தை தயாரிக்க முடியும். இதனால் பூமியில் 250 வருடங்களுக்கு செலவே இல்லாமல் எல்ல இடங்களுக்கும் மின்சாரம் வழங்க முடியும்.
 
இஸ்ரோவின் இந்த திட்டம் நிறைவேறினால் நிலவில் இருந்து மின்சாரம் தயாரித்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு சேரும். சீனா 2022ஆம் ஆண்டு தனது ஆராய்ச்சியை தொடங்க திட்டமிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்