ஜூலை 5 முதல் ஒவ்வொரு ஞாயிறும் முழு ஊரடங்கு: அதிரடி அறிவிப்பு

ஞாயிறு, 28 ஜூன் 2020 (09:07 IST)
சென்னையில் கடந்த 21ஆம் தேதி ஞாயிறும், இன்றும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஜூலை 5 முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஒவ்வொரு ஞாயிறு அன்ரும் முழு ஊரடங்கு என
ஜூலை 5 முதல் ஒவ்வொரு ஞாயிறும் முழு ஊரடங்கு
அறிவிக்கப்பட்டுள்ளது
 
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் அம்மாநில அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளால் ஓரளவு கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகாவில் 11,923 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த நிலையில் ஏற்கனவே கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் தொற்று பரவலை தடுக்கும் விதமாக வரும் ஜூலை 5 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என  அம்மாநில அரசு அறிவித்துள்ளது
 
மேலும் முழு ஊரடங்கு நேரம் இரவு 9 மணி முதல் இருந்த நிலையில், ஜூலை 10ஆம் தேதி முதல் இரவு 8 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை செயல்பாட்டில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின்போது, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர வேறு எந்த கடையும் திறக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரசு அலுவலகங்களும் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் இயங்காது என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்