கொலையில் முடிந்த சரக்கு சகவாசம்..! – மும்பையில் பரபரப்பு!

புதன், 16 பிப்ரவரி 2022 (09:02 IST)
மும்பையில் மது அருந்தி நண்பர்களான இருவரில் ஒருவரை மற்றொருவர் கல்லால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அந்தேரியில் உள்ள மொரோல் பகுதியை சேர்ந்தவர் ராகுல் கெய்க்வாட். இவர் அதே பகுதியை சுஷாந்த் கெய்க்வாட் என்பவருடன் மது அருந்துவதன் மூலம் நட்பாகியுள்ளார். இருவரும் தினமும் ஒன்றாக சேர்ந்தே மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ராகுலும், சுஷாந்தும் இணைந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் எழ, அது சண்டையாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுஷாந்த் மது போதையில் பெரிய கல்லால் ராகுலை தொடர்ந்து தாக்கியுள்ளார். இதனால் ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்த போலீஸார் ராகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதுடன், தப்பியோடிய சுஷாந்தையும் தேடி பிடித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்