கடந்த சில மாதங்களாகவே வெடிகுண்டு மிரட்டல் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது என்பதும், பள்ளிகள், கல்லூரிகள், தலைவர்களின் இல்லங்கள், விமானங்கள் உள்ளிட்டவற்றுக்கு போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது திருப்பதியில் உள்ள இஸ்கான் கோயிலுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருப்பதியில் உள்ள தனியார் ஹோட்டல்களுக்கும் தீவிரவாதிகள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், தற்போது இஸ்கான் கோயிலுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இஸ்கான் கோவில் நிர்வாகத்தினர் காவல்துறையில் புகார் அளித்ததாகவும், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து இஸ்கான் கோயில் வளாகத்தை தீவிரமாக தேடுதல் வேட்டை மேற்கொண்டதில் எந்த விதமான வெடிகுண்டுகளும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.