திருப்பதியில் மீண்டும் நேரடியாக இலவச தரிசன டோக்கன்கள்: தேவஸ்தானம் அறிவிப்பு!

சனி, 29 அக்டோபர் 2022 (12:25 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு டோக்கன் ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நவம்பர் 1 முதல் மீண்டும் நேரடியாக இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
 
இதுகுறித்து தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி அவர்கள் கூறியபோது திருப்பதியில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் இலவச தரிசனத்திற்காக நேரடி இலவச டோக்கன்கள் வழங்க உள்ளது என்று தெரிவித்துள்ளார் 
 
திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு நேரடி டோக்கன் வழங்குவது கடந்த ஏப்ரல் மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்றும் ஆன்லைனில் மட்டுமே வழங்கப்பட்டிருந்த இந்த டோக்கன்கள் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது மீண்டும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் நேரடியாக வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
ரயில் நிலையம் பின்புறம் உள்ள சீனிவாசன், ஸ்ரீதேவி ஆகிய வளாகங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் சனி ஞாயிறு திங்கள் புதன் ஆகிய நாட்களில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டோக்கன்களும், மற்ற நாட்களில் 10 ஆயிரன் டோக்கன்கள்  வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்