முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மருத்துவமனையில் அனுமதி: பெரும் பரபரப்பு

Webdunia
திங்கள், 11 மே 2020 (06:40 IST)
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் டெல்லி மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன்சிங் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்றும், சாதாரன வார்டில்தான் உள்ளார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
ஏற்கனவே கடந்த 2009ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவுக்கு பல பொருளாதார அறிவுரைகளை கூறி வந்த மன்மோகன் சிங் திடீரென உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
பிரதமராக மட்டுமின்றி ரிசர்வ் வங்கியின் கவர்னர், திட்டக்குழுவின் துணைத்தலைவர், மத்திய நிதியமைச்சர் என பல்வேறு பதவிகளை மன்மோகன்சிங் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்