காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏ முகமது கான் என்பவர் துளசி பாக் என்ற பகுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில், நேற்று அவர் தொழுகை நடத்த சென்றபோது, பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை எடுத்து திடீரென தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு, குரேஸ் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற முகமது கான், பின்னர் 2020 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். 2024 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.