முன்னாள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரியாக இருந்து கைது செய்து சர்ச்சையை கிளப்பிய கபில் ராஜ், தற்போது தனது அரசு பணியை விட்டு விலகி, ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்துள்ளார்.
மத்திய அரசின் IRS அதிகாரியாக பணிபுரிந்த கபில் ராஜ், விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வுக்குப் பிறகு, அவர் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழுமத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனியார் நிறுவனங்களில் சேருவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், கபில் ராஜ் ஒரு முக்கிய அரசியல் தலைவர்களின் கைதுக்கு பிறகு இந்த முடிவை எடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.