சைக்கிளில் உணவு டெலிவரி செய்த நபருக்கு டுவிட்டரால் கிடைத்த பைக்!

செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (17:40 IST)
சைக்கிளில் உணவு டெலிவரி செய்த நபருக்கு டுவிட்டரால் கிடைத்த பைக்!
சைக்கிளில் உணவு டெலிவரி செய்த நபர் ஒருவருக்கு டுவிட்டரால் 24 மணி நேரத்தில் பைக் கிடைத்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது
 
ராஜஸ்தானில் உள்ள உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் கடும் வெயிலில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்து வந்தார்ர்.  அவர் பார்த்து வந்த ஆசிரியர் பணி கொரோனா ஊரடங்கின்போது இழந்து விட்டதாகவும் இதனால் தற்போது சைக்கிளில் உணவு டெலிவரி செய்து மாதம் 10,000 சம்பாதிப்பதாகவும் அவர் உணவில் டெலிவரி செய்த ஆதித்யா என்பவரிடம் ஒருவரிடம் தெரிவித்தார் 
 
இதனை அடுத்து உணவை வாங்கிக் கொண்ட ஆதித்யா இதுகுறித்து புகைப்படத்துடன் டுவிட்டரில் பதிவு செய்தார். அவருக்கு டூவீலர் வாங்க உதவும்படி அவர் கேட்டு கொண்டதில் பலரும் நிதி உதவி செய்தனர்.
 
இதனை அடுத்த 24 மணி நேரத்தில் பணத்தில் உணவு டெலிவரி செய்யும் நபருக்கு பைக் வாங்கி கொடுத்தார் ஆதித்யா. இந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்