கேரளாவில் பெருவெள்ளம்: திமுக சார்பில் ரூ1 கோடி நிவாரணம்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (07:44 IST)
அரபிக் கடலில் நேற்று ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத்துக்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று மேக வெடிப்புகள் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மழை வெள்ளம் தீவிரம் அடைந்துள்ளது. இங்கு தீவிரம் அடைந்துள்ள மழைப்பொழிவு அசாதாரணமாக கருதப்படுகிறது. காரணம், இது தென்மேற்கு பருவமழைக்காலம் முடிவதற்கும் வடமேற்கு பருவமழை தொடங்குவதற்கும் இடையே ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் மீட்புப் பணிகள் இரவில் பாதிக்கப்பட்டன.
 
அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக கேரளாவின் பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக பயங்கர மழை பெய்து வருகிறது. முன்னதாக ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். கோட்டயம் மாவட்டத்தின் கூட்டிகால் என்ற இடத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ள பாதிப்பில் பலர் மாட்டிக்கொண்டுள்ளனர்.
 
கேரளா முழுவதும் இன்று இடி மழையும், வேகமான காற்றும் வீசும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. எனவே, மழை நிற்காவிட்டால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
அரபிக் கடலில் லட்சத்தீவுகள் அருகே குறைந்த காற்றழுத்த மண்டலம் தற்போது பலவீனமடைந்து வருகிறது. ஆனாலும் மாலை வரை மழை தொடரும் என்றுதான் வானிலை முன்னறிவிப்புகள் கூறுகின்றன" என்று முதல்வர் பினராயி விஜயன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து மீட்பு பணிகளுக்காக கேரள மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலரும் நிர்வாண உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க. அறக்கட்டளைச் சார்பில் ரூபாய் 1 கோடி கேரள மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்