தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: 5 மாநிலங்களில் யாருக்கு வெற்றி..!

வியாழன், 30 நவம்பர் 2023 (18:24 IST)
மினி நாடாளுமன்ற தேர்தல் என்று கூறப்படும் ஐந்து மாநில தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
 
 மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அந்த கட்சிக்கு 130 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 100 தொகுதிகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ராஜஸ்தான் மாநிலத்திலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,. அம்மாநிலத்தில் 100 முதல் 122 தொகுதிகள் வரை பாஜகவுக்கு கிடைக்கும் என்றும் காங்கிரஸுக்கு 80 தொகுதி வரை கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
சட்டிஸ்கர் மாநிலத்தில்  காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கட்சிக்கு சுமார் 50 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. 
 
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அங்கு 60 முதல் 65 தொகுதிகள் அக்கட்சிக்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மிசோரம் மாநிலத்தில் எம்எல்எப் என்ற மிசோரம் மாநில கட்சி ஆட்சியை மீண்டும் பிடிக்க உள்ளதாகவும் இந்த மாநிலத்தில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்